வடைகறி
Vada Curry is a very popular South Indian dish which is served as a side dish for idli , dosa and parotas.
Servings Prep Time
2people 15minutes
Cook Time
25minutes
Servings Prep Time
2people 15minutes
Cook Time
25minutes
Ingredients
கிரேவி
Instructions
  1. முதலில் தக்காளியை நீரில் போட்டு சிறிது நேரம் அடுப்பில் வைத்து கொதிக்க விட வேண்டும். பின் அதன் தோலை நீக்கிவிட்டு, அதனை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
  2. பின்னர் ஊற வைத்த கடலைப்பருப்பை நன்கு கழுவி, அதனை மிக்ஸியில் போட்டு, அத்துடன் வரமிளகாய், சோம்பு மற்றும் உப்பு சேர்த்து சேர்த்து, கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
  3. பிறகு அதனை சிறுசிறு வடைகளாக தட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
  4. பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு கொடுத்துள்ள அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
  5. பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, அடுத்து வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் அரைத்து வைத்துள்ள தக்காளியை ஊற்றி, மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, 3/4 கப் தண்ணீர் ஊற்றி, கொதிக்க விட வேண்டும்.
  6. பிறகு அதில் வடைகளை போட்டு, மிதமான தீயில் 5 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், சுவையான வடைகறி ரெடி!!!