உருளைக்கிழங்கு மட்டன் சால்னா
Potato Mutton Salna is a simple and tasty side dish that goes well with tiffin varities.
Servings Prep Time
7people 15minutes
Cook Time
45minutes
Servings Prep Time
7people 15minutes
Cook Time
45minutes
Ingredients
Instructions
 1. ம‌ட்ட‌னில் கொழுப்பு மற்றும் ஜ‌வ்வு போன்றவற்றை நீக்கி ந‌ன்கு 5 அல்லது 6 முறை த‌ண்ணீரில் க‌ழுவி த‌ண்ணீரை வ‌டிக‌ட்ட‌வும்.
 2. வெங்க‌யாம், த‌க்காளியை நறுக்கி வைக்க‌வும்.கொத்தம‌ல்லி, புதினாவை ஆய்ந்து,க‌ழுவி த‌ண்ணீரை வ‌டிக்கவும்.
 3. முந்திரியை திரித்து அத்துட‌ன் தேங்காய் பொடி சேர்த்து த‌ண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ள‌வும். தேங்காய் சேர்ப்பது என்றால் ஒரு சிறிய‌ மூடியும், முந்திரி, க‌ச‌கசா சேர்த்து மையாக‌ அரைத்து வைக்க‌வும்.
 4. உருளைக்கிழ‌ங்கை தோலெடுத்து நடுத்தர துண்டுகளாக நறுக்கிக் கொள்ள‌வும்.
 5. குக்கர் அல்லது ஒரு வாயகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் மற்றும் டால்டாவை ஊற்றி பட்டை, ஏலக்காய், கிராம்பு போட்டு வெடிக்க விடவும்.
 6. அதனுடன் வெங்காயத்தை போட்டு தீயை மிதமாக வைத்து வதக்கவும். அதன் பிறகு இஞ்சி பூண்டு விழுதை போட்டு 2 நிமிடம் வதக்கி விட்டு ,இஞ்சி பூண்டின் வாசனை அடங்கி நிறம் மாறும் வரை சிம்மில் வைக்கவும்.
 7. கொத்தமல்லி, புதினாவில் முக்கால் பாகத்தை சேர்த்து நன்கு வதக்கி ஒரு நிமிடம் சிம்மில் வைத்து மூடி விடவும். பின்னர் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி விட்டு 5 நிமிடம் சிம்மில் வைத்து மூடி விடவும்.
 8. பிற‌கு மிள‌காய் தூள், த‌னியாதூள், ம‌ஞ்ச‌ள் தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து ம‌சாலா ந‌ன்கு தக்காளியோடு சேரும் வ‌ரை கிள‌றி அதில் ம‌ட்ட‌ன் மற்றும் த‌யிர் சேர்க்க‌வும்.
 9. தீயை குறைத்து வைத்து கிளறி எல்லா ம‌சாலா வ‌கைக‌ளும் க‌றியில் சேரும்படி ஐந்து நிமிட‌ம் விடவும்.
 10. கறி மசாலா கலவையில் எலுமிச்சை பழத்தை பிழிந்து விடவும்.
 11. நறுக்கி வைத்திருக்கும்‌ உருளையை சேர்த்து ஒரு முறை கிள‌றி இர‌ண்டு ட‌ம்ள‌ர் த‌ண்ணீர் சேர்த்து குக‌க்ரை மூடி தீயை மித‌மாக‌ வைத்து ஐந்து விசில் விட்டு இறக்க‌வும்.
 12. பாத்திரத்தில் வேக‌ வைப்பதாக இருந்தால் 20 நிமிட‌ம் வேக விடவும்.
 13. குக்க‌ர் ஆவி அட‌ங்கிய‌தும் திற‌ந்து வெந்த‌ சால்னாவை வேறு ஒரு வாய‌க‌ன்ற‌ பாத்திரத்திற்கு மாற்றி அரைத்து வைத்துள்ள‌ தேங்காய் முந்திரி க‌ல‌வையை ஊற்ற‌வும்.
 14. ந‌ன்கு‌ தேங்காய் வாசனை அட‌ங்கும் வ‌ரை கொதிக்க‌ விட்டு மீதி உள்ள‌ கொத்தம‌ல்லி, புதினாவை சேர்த்து இற‌க்க‌வும்.
 15. சுவையான‌ மட்டன் உருளைக்கிழங்கு சால்னா ரெடி
ADVERTISING