உருளைக்கிழங்கு குருமா
Potato Kurma is a fantastic side dish for chapati, poori or any Indian flat bread. It is also very easy to prepare.
Servings Prep Time
5people 10minutes
Cook Time
25minutes
Servings Prep Time
5people 10minutes
Cook Time
25minutes
Ingredients
Instructions
  1. முதலில் மிக்ஸியில் தேங்காய் மற்றும் கசகசா போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
  2. பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, இலவங்கம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்க வேண்டும்.
  3. பின்பு நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
  4. பிறகு மசித்த உருளைக்கிழங்கு போட்டு வதக்கி, அத்துடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லி தூள் மற்றும் உப்பு சேர்த்து, தண்ணீர் விட்டு கொதிக்க விட வேண்டும்.
  5. நன்கு கொதித்ததும், அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையைப் போட்டு கிளறி, பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவிட்டு இறக்க வேண்டும்.
  6. இப்போது சுவையான உருளைக்கிழங்கு குருமா ரெடி!!!
  7. இதனை சப்பாத்தி அல்லது பூரியுடன் சாப்பிட்டால், சூப்பராக இருக்கும்.
ADVERTISING