வெண் பொங்கல்
Pongal, Pongal is a harvest festival celebrated in Tamil Nadu, and a rice dish also known as Pongal is an integral part of the celebrations. It is cooked in earthen pots and a few everyday varieties are also prepared in almost every South Indian home.
Servings Prep Time
3people 5minutes
Cook Time
30minutes
Servings Prep Time
3people 5minutes
Cook Time
30minutes
Ingredients
Instructions
  1. முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பச்சரிசி மற்றும் பாசிப்பருப்பை தனித்தனியாக பொன்னிறமாக வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
  2. பின்னர் அதனை நன்கு கழுவி, குக்கரில் ஒன்றாக சேர்த்து 5 கப் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு மற்றும் 1 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து, 3-4 விசில் விட்டு இறக்கி, லேசாக மசித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
  3. அடுத்து முந்திரியை சிறிது நெய் ஊற்றி வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
  4. பின் மிளகு மற்றும் சீரகத்தை ஒன்றிரண்டாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
  5. பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், மிளகு சேர்த்த தாளித்து, பின் அதில் இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.
  6. பின்பு அத்துடன் மசித்து வைத்துள்ள சாதத்தை சேர்த்து நன்கு கிளறி விட்டு, பின் அதில் முந்திரியை சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், வெண் பொங்கல் ரெடி!!! இதனை சாம்பார் மற்றும் தேங்காய் சட்னியுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.