நண்டு குழம்பு
Nandu kulambu is a mouthwatering spicy, traditional and authentic recipe. It has a good flavor and tastes good with hot rice.
Servings Prep Time
6people 15minutes
Cook Time
40minutes
Servings Prep Time
6people 15minutes
Cook Time
40minutes
Ingredients
Instructions
  1. நண்டை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். 4 சின்ன வெங்காயத்தை மட்டும் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை நான்கு துண்டுகளாக நறுக்கவும். முருங்கைகாயை 2 இன்ச் அளவு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைத்துக் கொள்ளவும்.
  2. மிக்ஸியில் தேங்காய் துருவலுடன், மிளகு, சோம்பு, பூண்டு சேர்த்து ஒரு முறை அரைத்து விட்டு பிறகு அதனுடன் சின்ன வெங்காயத்தை சேர்த்து விழுதாக அரைக்கவும்.
  3. புளியுடன் ஒரு கப் தண்ணீர் ஊற்றி கரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். மேலும் அரை கப் தண்ணீர் சேர்த்து கலந்துக் கொள்ளவும். புளிக்கரைசலுடன் அரைத்த விழுது, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.
  4. வாணலியில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து நறுக்கின சின்ன வெங்காயத்தை போட்டு அதனுடன் கறிவேப்பிலை, பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து 3 நிமிடம் வதக்கவும்.
  5. வெங்காயம், தக்காளி வதங்கியதும் அதில் நண்டை போட்டு 5 நிமிடம் வதக்கவும்.
  6. பின்னர் கரைத்து வைத்திருக்கும் புளிக்கரைசலை ஊற்றி மேலும் அரை கப் தண்ணீர் சேர்த்து, அதில் முருங்கைக்காய் துண்டுகளை போடவும்.
  7. 15 நிமிடம் நன்கு கொதிக்க விடவும். பின்னர் குழம்பு சற்று கெட்டியாக ஆனதும் இறக்கி விடவும்
  8. சுவையான நண்டு குழம்பு தயார்.