காளான் குருமா
Mushroom gravy is simple, quick and flavorful. It has a smooth gravy like the restaurant style dish with full of flavors. It is best served with plain or flavored rice and roti.
Servings Prep Time
2people 10minutes
Cook Time
20minutes
Servings Prep Time
2people 10minutes
Cook Time
20minutes
Ingredients
வறுத்து அரைப்பதற்கு :
தாளிப்பதற்க்கு :
Instructions
  1. பட்டன் காளானை கழுவி சுத்தம் செய்து 2 அல்லது 3 துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
  2. வறுத்து அரைக்க கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் ஒன்றின் பின் ஒன்றாக சேர்த்து வறுக்கவும். கடைசியாக தேங்காய் சேர்த்து வறுக்கவும்.
  3. சுமார் 1 அல்லது 2 நிமிடம் வறுத்த பின்பு ஆறவிடவும். ஆரிய கலவையை மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் விட்டு மைய அரைத்து வைக்கவும். இது தான் செட்டிநாடு மசாலா.
  4. ஒரு வாணலியில் என்னை ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், பிரியாணி இலை, ஏலக்காய் சேர்த்து வதக்கி பின் வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை வதக்கவும். பின் தக்காளி சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
  5. இதனுடன் அரைத்துவைத்துள்ள கலவையை மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும். இதனுடன் வெட்டி வைத்துள்ள காளான் சேர்த்து கிளறவும். காளான் வதங்கும் பொழுது தண்ணீர் விடும்.
  6. காளான் தண்ணீர் விட ஆரம்பித்ததும் 1/2 – 1 கப் அளவு தண்ணீர் விட்டு மிதமான தீயில் கலவையை வேகவைக்கவும். குருமா சிறிது நேரத்தில் எண்ணெய் விட ஆரம்பிக்கும் அப்பொழுது காளான் வெந்துவிட்டதெனில் கொத்துமல்லி இலை தூவி இறக்கவும்.
  7. காரசாரமான காளான் குருமா தயார் !
Recipe Notes

இந்த குருமா செய்வதற்கு சின்ன வெங்காயம் உபயோகிக்கவும், பெரிய வெங்காயம் தவிர்க்கவும்.
வறுக்க கொடுத்துள்ள பொருட்களை மிதமான தீயில் வறுக்கவும்.