குஸ்கா பிரியாணி
Kuska biryani is a tasty biryani recipe or plain biryani without vegetables. It is very easy to make and tasty. Kuska biryani is also called as kuska!
Servings Prep Time
3-4people 10minutes
Cook Time
30minutes
Servings Prep Time
3-4people 10minutes
Cook Time
30minutes
Instructions
  1. அரிசியினை நன்றாக அலசி இருபது நிமிடங்கள் ஊற வைக்கவும். வெங்காயம், தக்காளியினை நறுக்கி வைக்கவும். பச்சை மிளகாயினை இரண்டாக கீறி வைக்கவும்
  2. பாத்திரத்தில் எண்ணெய் , நெய் ஊற்றி காய்ந்த பின்பு நறுக்கிய ஒரு வெங்காயத்தினை மட்டும் போட்டு நல்ல பொன்னிறமாக பொறித்து எடுக்கவும். பிறகு அதே எண்ணெயில் முந்திரியும் போட்டு பொறித்து எடுத்து தனியாக வைக்கவும்
  3. குக்கரில் பொறித்த எண்ணெயினை ஊற்றவும் அதில் ரம்பை இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளிக்கவும்
  4. அதில் நீட்டமாக நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கிய பிறகு இஞ்சி பூண்டு விழுது பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அடி பிடிக்காமல் சிம்மில் வைத்து கலந்துவிடவும்
  5. பிறகு அதில் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். பொடிசாக நறுக்கிய புதினா கொத்தமல்லி சேர்த்து கலந்துவிடவும். பிறகு அதில் தேங்காய் பால் , தண்ணீர் உப்பு கலந்து கொதிக்க வைக்கவும். நன்றாக தண்ணீர் கொதிக்கும் பொழுது ஊறவைத்த அரிசியினை சேர்த்து கிண்டிவிட்டு குக்கரை மூடி ஒரு விசில் ஹையிலும் ஒரு விசில் லோவிலும் வைத்து அணைக்கவும்.
  6. 10 முதல் 15 நிமிடங்கள் கழித்து குக்கரை திறந்து குஸ்காவின் மீது ரோஸ் வாட்டர் சுற்று வரை ஊற்றி மெதுவாக மரக்கரண்டி வைத்து கிண்டிவிடவும். இதனை அப்படியே வேற பவுலில் மாற்றி மேலே பொறித்து வைத்த வெங்காயம், முந்திரி போட்டு பரிமாரவும்.
  7. சுவையான குஸ்கா ரெடி, சாப்பிட சுவையாக இருக்கும்.
Recipe Notes

Products we recommend with this Recipe:
pressure-cooker-india-hf
Pressure Cookers Online India