கடலை கறி ரெசிபி!
A simple and easy Kadala curry cooked in roasted coconut gravy.
Servings Prep Time
3people 10minutes
Cook Time
25minutes
Servings Prep Time
3people 10minutes
Cook Time
25minutes
Ingredients
Instructions
  1. கொண்டைக்கடலையை ஆறு முதல் 8 மணி நேரம் வரை ஊறவைக்கவும்.
  2. குக்கரில் ஊறிய கடலை, மஞ்சள் தூள், தேவைக்கு உப்பு போட்டு மூடி 8 விசில் விட்டு, வேக வைத்து எடுக்கவும்.
  3. ஒரு வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு தேங்காய் துருவல் லேசாக சிவற வறுக்கவும், அத்துடன் மல்லிப் பொடி, சீரகப் பொடி, பெருஞ்சீரகப் பொடி, மிளகாய்ப் பொடி சேர்த்து லேசாக வறுத்து ஆற வைக்கவும்.
  4. வறுத்த மசாலாவை தண்ணீர் விட்டு பட்டு போல் அரைத்து எடுக்கவும்.
  5. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்த பின், கடுகு, கருவேப்பிலை போட்டு பொரிக்கவும்.
  6. பின்னர், நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்பு அத்துடன் நறுக்கிய தக்காளி, பச்சை மிள்காய் சேர்த்து, சிறிது உப்பும் சேர்த்து நன்கு வதங்கவிடவும்.
  7. தக்காளி நன்கு வதங்கிய பின் அரைத்த மசாலாவை சேர்த்து தேவைக்கு தண்ணீர் (கொண்டைக்கடலை வேக வைத்த தண்ணீர்) சேர்த்து நன்கு கொதிக்க விடவும். நன்கு கொதிவரவும், வெந்து எடுத்து வைத்த கொண்டைக்கடலையை சேர்க்கவும். உப்பு சரிபார்க்கவும்.
  8. நன்கு கொதித்து வரும் பொழுது அடுப்பை குறைத்து வைக்கவும். தேவைக்கு ஏற்ப தண்ணீர் சேர்த்து கொதித்து இறக்கவும்.
  9. சுவையான கேரளா ஸ்பெஷல் கடலை கறி தயார். வெறும் சாதம், சப்பாத்தி, ஆப்பம்,புட்டுவுடன் சாப்பிட ஜோராக இருக்கும்.