குலாப் ஜாம்
Gulab Jamun is one of the most popular and traditional Indian sweet recipe made especially for festive delight, such as during diwali, holi and navratri.
Servings Prep Time
15people 5minutes
Cook Time
35minutes
Servings Prep Time
15people 5minutes
Cook Time
35minutes
Ingredients
Instructions
  1. முதலில் குலாப் ஜாமூன் பவுடரை ஒரு பாத்திரத்தில் கொட்டி சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ளவும். சிறிது நேரம் கழித்து உங்களுக்குத் தேவையான அளவுகளில் உருண்டை பிடித்து வையுங்கள். உருண்டைகள் பிடிக்கும் போது ஒரு பாத்திரத்தில் எண்ணெய் தேய்த்து அதில் உருண்டையை போட்டு கையினால் உருட்டினால், உருண்டை விரிசல் இல்லாமல் மொழு மொழு என்று வரும்.
  2. பிறகு வாணலியில் ஒரு பாத்திரத்தில் அஸ்காவை கொட்டி தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். அதில் சிறிது ஏலக்காய் பொடியை சேர்க்கவும். மற்றொரு வாணலியில் கால் கிலோ நெய் பாதியை ஊற்றி அதில் 2 அல்லது 3 உருண்டைகளைப் போட்டு உருண்டைகள் அனைத்துப் பக்கமும் வேகும் வகையில் உருட்டிக் கொண்டே இருங்கள்.
  3. அடுப்பை மிதமான சூட்டில் வைத்து மாவு நன்கு வேகும் வரை உருண்டைகளை உருட்டவும். உருண்டைகள் நன்கு சிவந்ததும் எடுத்து தனியாக வைக்கவும். இப்படியே அனைத்து உருண்டைகளையும் பொரித்து எடுக்கவும்.
  4. அதேநேரம், சர்க்கரை பாகு தயாரானதும் அதில் பொரித்த ஜாமுன் உருண்டைகளைப் போட்டு குறைந்தது 5 மணி நேரம் ஊறவிடவும். விரைவாக குலோப் ஜாமூன் தயாராக வேண்டும் என்றால், பாகு நன்கு சூடாக இருக்கும் போதே, வாணலியில் குலாப் ஜாமூனை பொரித்து எடுத்து போட்டுவிட்டால், பாகு ஆறியதுமே ஜாமூன் தயாராகிவிடும். அவ்வளவு தாங்க குலாப் ஜாமூன் ரெடி.