முட்டை பனியாரம்
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சுவையான முட்டை பனியாரம் எப்படி செய்வது என்பதை தற்போது பார்க்கலாம்.
Servings Prep Time
2people 5minutes
Cook Time
15minutes
Servings Prep Time
2people 5minutes
Cook Time
15minutes
Ingredients
Instructions
  1. வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கவும். பச்சைமிளகாய், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி வைக்கவும். முட்டையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி நன்கு அடித்துக் கலக்கவும்.
  2. அடித்த முட்டையை இட்லி மாவுடன் சேர்த்து நன்றாக கலக்கவும். பிறகு அதனுடன் உப்பு சேர்த்து நன்கு கலந்துக் கொள்ளவும்.
  3. வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு போட்டு தாளிக்கவும். அதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கி முட்டை ஊற்றி கலந்த இட்லிமாவு கலவையுடன் தாளித்த பொருட்களை சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும்.
  4. குழிப்பணியாரக்கல்லில் ஒவ்வொரு குழியிலும் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒரு கரண்டியில் மாவை எடுத்து பணியாரக்கல்லில் முக்கால்பாகம் அளவிற்கு ஊற்றவும்.
  5. பணியாரம் ஒருபக்கம் வெந்ததும் திருப்பிப் போட்டு நன்கு வேகவிட்டு எடுக்கவும். முட்டைப் பணியாரம் தயார்.